’வாட்ஸ்-அப் செயல்பாடு தொடரும் ’புதுவை முதல் - அமைச்சர் உத்தரவை ரத்துசெய்த கவர்னர் கிரண்பேடி

’வாட்ஸ்-அப் செயல்பாடை ரத்துச் செய்து புதுவை முதல் - அமைச்சர் பிறப்பித்த உத்தரவை கவர்னர் கிரண்பேடி ரத்து செய்துள்ளார்.

Update: 2017-01-05 10:13 GMT
புதுச்சேரி,

கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி இருந்தார். இந்த வாட்ஸ்-அப்பில் கூட்டுறவு பதிவாளர் ஆபாச படம் அனுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து இனி அதிகாரிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் அரசு தகவல்களை அனுப்ப கூடாது என்று முதல்அமைச்சர் நாராயண சாமி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அரசு கீழ்நிலை செயலாளர் கண்ணன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் இனி சமூக வலைத்தளம் மூலம் அதிகாரிகள் அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை பரிமாறக் கூடாது என கூறப்பட்டு இருந்தது. எனவே, இதன் மூலம் கவர்னர் உருவாக்கி இருந்த வாட்ஸ்-அப் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கீழ்நிலை செயலாளர் கண்ணன் பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. வாட்ஸ்-அப் செயல்பாடு தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்