உலகளாவிய மந்த நிலையிலும் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது: பிரதமர் மோடி

உலக பொருளதாரத்தின் என்ஜினாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-10 14:09 GMT
புதுடெல்லி,

உலக பொருளதாரத்தின் என்ஜினாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து  பிரதமர் மோடி பேசியதாவது:- “
 இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பல்வேறு நாட்டு பிரநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

ஜனநாயகம் நம்முடைய முக்கிய பலம் . நம்முடைய இளைய சமுதாயமே முக்கிய மூலதனம். மின்னனு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மின்னணு நிர்வாகம் எளிமையானது, பயன்மிகுந்தது. தொழில்துறையில் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். உலக பொருளாதரம் வலுவிழந்த நிலையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு டிஜிட்டல் முறையே சிறந்தது . உலகளாவிய மந்த நிலையிலும் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக பொருளாதாரத்தின் இயந்திரமாக இந்தியா உள்ளது. 

பெரிய அளவில் சுற்றுலாத்துறை மேம்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதற்கு சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு அவசியம். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. உலகின் 6-வது பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவாகியுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்