செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பிரதமர் மோடி கவலைப்படாத அதிகாரிகள்

பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் அரசுத்துறை செயலாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பிரதமர் மோடி பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

Update: 2017-01-14 04:24 GMT
புதுடெல்லி

பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் பல்வேறு அரசுத்துறை செயலாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய துறையின் செயலாளர்கள் அறிக்கை ஒன்றை சமர்பித்தனர். இதனை பார்த்து அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே இந்த அறிக்கை பற்றி அறிந்த பிரதமர் மோடி, அந்த அறிக்கையை மேம்படுத்தி தருமாறு, அதாவது விவசாயத்துறையில் புதிய யுக்திகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் அவர் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்து பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் போது, அறிக்கை சமர்பித்த பிறகு நடைபெறும் விவாதங்கள் வரை பிரதமர் மோடி கலந்து கொள்வார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதராம், கழிவு நீர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளின் செயலாளர்கள் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே பிரதமர் எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரதமர் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியதை அதிகாரிகள் பெரியவிஷயமாக எடுத்து கொள்ளவில்லை

மேலும் செய்திகள்