பெட்ரோல் விலை 54 காசு உயர்ந்தது டீசல் விலை ரூ.1.26 அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

Update: 2017-01-16 00:00 GMT

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த 1–ந் தேதி நள்ளிரவு, இவற்றின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் (வரிகள் நீங்கலாக), டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03–ம் (வரிகள் நீங்கலாக) உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சென்னையை பொறுத்தவரை, பெட்ரோல் விலை 54 காசு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.70.07 ஆக இருந்த பெட்ரோல் விலை, ரூ.70.61 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.1.26 உயர்ந்துள்ளது. அதன் விலை ரூ.59.47–ல் இருந்து ரூ.60.73 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்