பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Update: 2017-01-18 10:17 GMT
டேராடூன்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி திவாரி தனது மகன் மற்றும் மனைவியுடன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த திவாரி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவில் இணைய இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

91 வயதான திவாரி மூன்று முறை உத்தர பிரதேச முதல் மந்திரியாகவும் உத்தரகாண்டின் மூன்றாவது முதல் மந்திரியாக 2002-2007 வரை பதவி வகித்துள்ளார். மேலும் மத்திய மந்திரியாகவும் அரசின் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ள திவாரி, 2007 முதல் 2009 வரை ஆந்திர பிரதேச கவர்னராகவும் இருந்தார். பின்னர் பாலியல் சர்ச்சை காரணமாக பதவி விலகினார். 

உத்தரகாண்டில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாரதீய ஜனதாவில் திவாரி சேரவுள்ளது அக்கட்சிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட்டில் மாபெரும் தலைவராக பார்க்கப்படும் திவாரியின்  ஆதரவு ஒட்டுக்கள் கணிசமாக பாஜகவுக்கு வரும் என்று தெரிகிறது. 

மேலும் செய்திகள்