விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழகத்திற்கு விடுகிறது ஆர்பிஐ

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடப்படுகிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

Update: 2017-02-03 15:55 GMT
புதுடெல்லி, 


ஆர்பிஐ வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடுகிறது, மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் ஆர் என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும், கவர்னர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டிற்கு பின்பகுதியில் 2017-ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இப்போது புதியதாக கொண்டுவரப்பட்டு உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் பழைய ரூபாய் நோட்டை போன்ற அம்சங்களை ஒத்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியதாக விடப்படும் 100 ரூபாய் நோட்டுகளும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்