சர்க்கரை நோயால் அவதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை

டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

Update: 2017-02-05 20:30 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் ஒரு நாளில் 3 முறை ‘இன்சுலின்’ ஊசி போட்டுக்கொள்கிறார்.

பஞ்சாப் தேர்தலையொட்டி அங்கு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் நேற்று டெல்லி திரும்பினார். தற்போது அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, சர்க்கரை நோய் மற்றும் காய்ச்சலுக்காக இயற்கை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அவர் முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் நாளை பெங்களூரு செல்கிறார். அங்கு அவர் 12 முதல் 14 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.

தொடர் இருமல் நோயால் அவதிப்பட்டு வந்த கெஜ்ரிவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்