நாகலாந்து முதல்-மந்திரி ஜீலியாங் பதவி விலக முடிவு?

நாகலாந்து முதல்-மந்திரி டிஆர் ஜீலியாங் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-02-19 15:26 GMT
கொஹிமா,

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணிக்கு பா.ஜனதாவின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. முதல்–மந்திரியாக டி.ஆர்.ஜெலியாங் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 48 பேர் முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அதனை தொடர்ந்து நாகலாந்து மக்கள் முன்னணியின் அவசர கூட்டம் நாளை நடக்க உள்ளது. அதில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல்–மந்திரி ஜெலியாங் பதவி விலக கோரியும், நாகாலாந்து பழங்குடியினர் நடவடிக்கை குழு கடந்த 30–ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறது இதனால் அம்மாநிலத்தில் அசாதரண சூழல் நிலவி வருகிறது. டிஆர் ஜீலியாங் முதல்-மந்திரி பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்