மோடியும், அமித்ஷாவும் பயங்கரவாதிகள் சமாஜ்வாடி தாக்கு; விரக்தியடைந்து விட்டனர் பா.ஜனதா பதிலடி

பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் பயங்கரவாதிகள் என சாடிய சமாஜ்வாடிக்கு பாரதீய ஜனதா விரக்தியடைந்தவர்கள் என பதிலடி கொடுத்து உள்ளது.

Update: 2017-02-20 12:41 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனத்தின் உச்சமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பயங்கரவாதிகள் என சமாஜ்வாடி தாக்கிஉள்ளது. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ராஜேந்திர சவுதாரி, “ஓட்டுக்காக பாரதீய ஜனதாவினர் அச்சம் நிலவும் ஒரு சூழ்நிலையை மாநிலத்தில் உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் (அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி) பயங்கரவாதிகள். அவர்கள் நம்முடைய ஜனநாயகத்தில் பயங்கரவாதத்தை உருவாக்க விரும்புகிறார்கள்,” என்றார் செய்தியார்களிடம். 

மேலும் பேசுகையில் பாரதீய ஜனதாவிற்கு அதுசெய்த பணி தொடர்பாக பேசுவதற்கு எதுவும் கிடையாது, எனவே அக்கட்சியின் தலைவர்கள் வெற்று குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். பாரதீய ஜனதாவிற்கு தெரியும் உத்தரபிரதேசத்தில் அவர்கள் தோல்வி அடைந்து கொண்டு வருகிறார்கள் என்று. அவர்களுடைய நிலையானது பீகாரைவிட உத்தரபிரதேச மாநிலத்தில் மேலும் மோசமாக செல்லும் என்றும் கூறிஉள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி உத்தரபிரதேச தேர்தல் பிரசார கூட்டங்களில் அங்கு ஆளும் சமாஜ்வாடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரின் எல்லை மீறிய பேச்சுக்கு பாரதீய ஜனதாவும் பதிலடி கொடுத்து உள்ளது. இது சமாஜ்வாடி கட்சியினரின் விரக்தியாகும். பிரதமர் மோடிக்கு எதிராக தன்அடக்கம் அற்று பேசும் சமாஜ்வாடிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாரதீய ஜனதா தலைவர் ஓம் மாதூர் பேசிஉள்ளார். சமாஜ்வாடி தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது, எனவேதான் விரக்தியினால் அவர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த காரணம் என பா.ஜனதா கூறிஉள்ளது.

மேலும் செய்திகள்