பெண்களுக்கு பாலியல் தொல்லை; ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் நடிகர்–நடிகைகள் ஆவேசம்

பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நடிகர்–நடிகைகள் ஆவேசமாக கூறிஉள்ளனர்.

Update: 2017-02-20 16:18 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று திருவனந்தபுரத்தில் டி.வி. மற்றும் 

திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர்–நடிகைகளின் கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை வி.எஸ்.சிவகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி 

வைத்தார். இந்த கூட்டத்தில் நடிகை பிரியங்கா, சிப்பி, கனகலதா, பாக்கியலட்சுமி, பார்வதி, நடிகர் இந்திரஜித் உள்பட ஏராளமான நடிகர்– 

நடிகைகள் பங்கேற்றனர். கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னணி குரல் கலைஞர் பாக்கிய லெட்சுமி பேசியதாவது:–

 கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையை போல் இந்தியாவில் வேறு எந்த பெண்ணுக்கும் நடைபெற கூடாது. ஆண்களின் 

பாலியல் அத்துமீறல்களை தடுக்க பெண்கள் நாம் முன் வரவேண்டும், வெட்கம், பயம் காரணமாக பெண்கள் பின்வாங்கும் நிலை இருக்கும் 

வரை சபல புத்தியுள்ள ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சரியான 

தண்டணை வழங்கப்பட வேண்டும். தற்போதைய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகி 

உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இத்தகைய கொடும் குற்றவாளிக்கு முன் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றங்களுக்கு எதிராக 

போராட நாம் தயாராக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க 

வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர்–நடிகைகளும், ‘பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க 

வேண்டும்’ என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.

மேலும் செய்திகள்