இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: அமெரிக்கா விசாரணையை துரிதப்படுத்த தூதரகம் வலியுறுத்தல்

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று இந்திய தூதரம் வலியுறுத்துள்ளது.

Update: 2017-02-28 05:03 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோதலா (32) கடந்த புதன்  கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு  என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட சீனிவாசின் உடல் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், இந்த படுகொலை தொடர்பாக விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இறந்த ஸ்ரீநிவாஸின் சகோதரர் மாதவ், இந்திய அரசின் அனைத்து உதவியும் கிடைக்கிறது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்