பாரதீய ஜனதா வெற்றி உத்தரபிரதேசத்தில் இன்றே ஹோலி கொண்டாட்டம்

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா வெற்றி பெறப்போகிறது. 299 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ளது.இதை தொடர்ந்து தொண்டர்கள் இன்றே ஹோலி கொண்டாட்டம் தொடங்கினர்.

Update: 2017-03-11 05:05 GMT
லக்னோ

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக 299 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆளும் சமாஜ்வாதி கட்சி 74 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 21 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.  சமாஜ்வாடி& காங்கிரஸ் கூட்டணிக்கும், பகுஜன் சமாஜ்  கட்சிக்கும் படுதோல்வி ஏற்பட்டது.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஹோலி. இந்த பண்டிகை நாளை (12&ந்தேதி) மாலை முதல் 13&ந்தேதி வரை கொண்டாடப்படும்.

உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றுள்ளதால் அங்கு ஹோலி கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விட்டது. வெற்றியை கொண்டாடும் விதமாக பா.ஜனதா தொண்டர்கள்  இன்றே ஒருவருக்கொருவர் முதலில் கலர் பொடிகளை  தூவி கொண்டனர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் ஹோலியையொட்டி 40 சதவீத பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. இதற்கு தேர்தல் தான் காரணம் என அங்குள்ள  வியாபாரிகள் சொல்கிறார்கள்.

மேலும் செய்திகள்