‘சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மாட்டேன்’ நீதிபதி கர்ணன் திட்டவட்டம்

கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் நீதிபதி கர்ணன் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.

Update: 2017-03-11 20:45 GMT

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று.

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் நீதிபதி கர்ணன் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ‘‘என் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது, என்னை தொல்லை செய்வதற்குத்தான்’’ என குற்றம் சாட்டினார்.

அவரிடம் நிருபர்கள், ‘‘மார்ச் 31–ந்தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராவீர்களா?’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘‘மாட்டேன்’’ என உறுதிபட பதில் அளித்தார். அது மட்டுமின்றி, ‘‘நான் எதற்காக ஆஜராக வேண்டும்?’’ என கேள்வியும் எழுப்பினார்.

மேலும் செய்திகள்