கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவா சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது

Update: 2017-03-14 06:23 GMT
புதுடெல்லி,

கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.மகாராஷ்டிரவாதி சோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்ச்சை கள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரவாதி சோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2  சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பா.ஜனதாவுக்கு பெரும் பான்மைக்கு தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து கவர்னர் மிர்துளா சின்காவை மனோகர் பாரிக்கர் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்டு மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத் தார். சட்ட சபையில் 15 நாட்களில் பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.

கோவா முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் இன்று மாலை பதவி ஏற்பார் என்றும் அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
கோவா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருப்பதையொட்டி மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்த ராணுவ இலாகா நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு கூடுதல் பொறுப்பாக வழங் \கப்பட்டது.

இதற்கிடையே மனோகர் பாரிக்கருக்கு கவர்னர் மிர்துளா சின்கா அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக விளங்குகிறது. அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க கவர்னர் முதலில் காங்கிரசுக்குத்தான் அழைப்பு விடுக்க வேண்டும். எனவே மகோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இன்று இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்  கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்