உ.பியில் விவசாய கடன் ரத்து பெரும் நிதி சுமையை கொடுக்கும் - பாரத ஸ்டேட் வங்கி

உ.பி மாநிலத்தில் சமீபத்திய தேர்தலில் விவசாய கடன்களை ரத்து செய்ய வாக்குறுதி வழங்கியுள்ளது வெற்றிபெற்றுள்ள பாஜக.

Update: 2017-03-20 21:02 GMT
மும்பை,

மொத்தமாக ரூ. 27,420 கோடிகளை வங்கிகள் இழக்க வேண்டியிருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உ.பியின் சிறு மற்றும் குறு விவசாயிகள் 2016 ஆம் ஆண்டு வரை அனைத்து அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமாக ரூ. 86,241.20 கோடிகளை விவசாய கடனாக பாக்கி வைத்துள்ளனர். இது சராசியாக நபருக்கு ரூ. 1.34 லட்சமாகும்.

2012 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி 31 சதவீத நேரடிக் கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்) வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் உ.பியிலும் கணக்கிட்டால் ரூ. 27,419.70 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 2011 மக்கள்தொகை கணக்குப்படி சுமார் 40 உ.பி கிராம குடும்பத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2010-11 ஆம் ஆண்டு விவசாய கணக்கெடுப்புப்படி மாநிலத்தின் மொத்த விவசாயிகளில் 92 பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

2016-17 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி உ.பி மாநில அரசின் நிதி வருவாய் ரூ. 3, 40, 255.24 கோடிகளாகும். இத்தொகையிலிருந்து ரூ. 27,419.70 கோடிகளை கணக்கிடும்போது அது மொத்த வருவாயில் 8 சதவீதமாகும். உ.பி அரசு கடன் தொகைகளை தள்ளுபடி செய்யும் என்றால் சில வருடங்களில் நிதி நெருக்கடியை சந்திக்கும். இதை சமாளிக்க வேறு ஏதேனும் புதுமையான வரி வருவாய் இனங்களை கண்டறிய வேண்டும் என்று அந்த அறிக்கை விளக்குகிறது.

மேலும் செய்திகள்