எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் நம்மிடம் உள்ளது ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் பெருமிதம்

இந்திய எல்லைகளில் இருக்கும் முப்படைகளும், எப்போதும் போரிடுவதற்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத், வீரர்களுக்குத் தகவல் சொல்லியுள்ளார்.

Update: 2017-03-24 04:58 GMT
ராணுவ தகவல் தொடர்புக் கருத்தரங்கு, டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசிய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத், எதிரி நாடுகள் இந்தியா மீது போர்தொடுப்பேன் என்று அச்சுறுத்தினால், "அவற்றை எதிர்கொள்ளும் சக்தி இந்தியாவிடம் இருக்கிறது. மேலும், அந்தப் போர் பாரம்பரிய முறைப்படி இருந்தாலும், அணு ஆயுதப் போராக இருந்தாலும், எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் நம்மிடம் உள்ளது. இந்திய எல்லைக்கு வெளியே இருந்து வரும் எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நாம் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், நவீன தொழில்நுட்பம்கொண்ட ஆயுதங்கள் வாங்குவதற்கு முன்னால் செய்யப்படும் சோதனைகளின் காலம் குறைக்கப்பட வேண்டும்." என்று கூறினார். 

மேலும் செய்திகள்