தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நாமக்கல், வேலூர், நெல்லை நீட் தேர்வு நடைபெறும் -மத்திய மந்திரி ஜவடேகர்

Update: 2017-03-24 07:28 GMT
மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு முறையான ’நீட்’  தேர்வை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்துக்கு இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதற்கிடையில்,  நீட் தேர்வுக்கு விலக்கு கோரி இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் தேர்வு நடக்கப்போகும் நகரங்கள் பட்டியலை பிரகாஷ் ஜவடேகர்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்முறை புதிதாக மூன்று தமிழக நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. 

இந்தியா முழுவதும் 103 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஜவடேகர் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் தமிழகத்தில் உள்ள நாமக்கல், வேலூர், நெல்லை ஆகிய மூன்று நகரங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நகரங்களுடன் சேர்த்து மொத்தம் 8 இடங்களில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்