இருபது வயது பெண் எரித்துக் கொலை; மரம் வெட்டுவதை தடுத்ததால் துயரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் கிராமத் தலைவர் உட்பட பலரால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-03-27 06:32 GMT
ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநிலம்  ஜோத்பூரிலிருந்து 100 கி.மீ தூரமுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருந்தவர் லலிதா. அந்த பஞ்சாயத்தில் சாலை அமைக்க லலிதாவின் தோட்டத்தில் இருந்த் மரத்தை வெட்ட பஞ்சாயாத்தார் அறிவுறுத்தினர்., ஆனால் லலிதா மறுத்து வநதார்.

நேற்று (ஞாயிறு) அன்று கிராமத் தலைவர் ரண்வீர் சிங் உட்பட சில கிராமத்தவர் லலிதா வீட்டிற்கு சென்று மரத்தை வெட்டுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்ச்சண்டை முற்றிய நிலையில் கிராமத் தலைவர் உட்பட சிலர் அவரைத் தாக்கையதோடு அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீ பற்ற வைத்தனர்.

இதில் உடல் முழுவதும் பின்னர் அவர் ஜோத்பூரிலுள்ள எம் ஜே எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரி சுரேஷ் சவுத்ரி கூறுகையில், “அவரது உடல் தற்போது பிணவறையிலுள்ளது. முறையான விசாரணைக்கு பிறகு கிராமத் தலைவர் உட்பட சிலரை விரைவில் கைது செய்வோம்” என்றார். போருண்டா காவல் நிலையத்தில் பத்து நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்