உ.பி.யில் பதவியேற்ற 150 மணி நேரத்திற்குள் 50 முடிவுகளை எடுத்து யோகி ஆதித்யநாத் அதிரடி

உ.பி. முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் 150 மணி நேரத்திற்குள் ஒரு மந்திரிசபை கூட்டம் கூட இல்லாமல் யோகி ஆதித்யாநாத் அதிரடி முடிவுகளை எடுத்து உள்ளார்.

Update: 2017-03-27 12:54 GMT
லக்னோ,

பதவி ஏற்ற பின்னர் ஒரு மந்திரிசபை கூட்டத்தை கூட கூட்டாமல் யோகி ஆதித்யாநாத் 50 முடிவுகளை எடுத்து உள்ளது பலதரப்பட்ட பதிலை பிரதிபலிக்க செய்து உள்ளது. தற்போதைய விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களில் முடிவுகளானது எடுக்கப்பட்டு உள்ளது. 

சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிப்பு, மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார நிலை குறித்து சோதனை, பெண்களுக்கு எந்தஒரு தொல்லையும் ஏற்பட்டுவிடாத வண்ணம் போலீஸ் கண்காணிப்பு, அரசு அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகள் என 50 முடிவுகளை அதிரடியாக எடுத்து உள்ளார். அரசு அலுவலங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பான் - மசாலா பயன்படுத்த கூடாது. அனைத்து துறைகளும் மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்தல் வேண்டும். அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிகளில் டி-சர்ட் அணிய கூடாது. பள்ளியில் தேவையில்லாமல் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது. அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு.

மானசரோவர் யாத்திரிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவி தொகையானது ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாக உயர்வு.

மாநிலத்தில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இல்லை என்பதை ஜூன் 15-ம் தேதிக்குள் பொதுத்துறை உறுதிசெய்ய வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட ஒப்பந்ததார்களை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என மந்திரிகள் அறிவுரை வழங்கவேண்டும். மாநிலம் முழுவதும் பெண் போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பு அறையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் போலீஸ் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டு உள்ளார். 

உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, விழா காலங்களில் தடையில்லா மின்சாரத்தை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் யோகி ஆதித்யநாத்.

மேலும் செய்திகள்