ஜி.எஸ்.டி. மசோதாவில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் ஓட்டெடுப்பில் நிராகரிப்பு

பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதா வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பில் நிராகரிக்கப்பட்டன.

Update: 2017-03-30 02:59 GMT
புதுடெல்லி, 

ஜி.எஸ்.டி. மசோதாவில், காங்கிரஸ் உறுப்பினர் வீரப்ப மொய்லி ஒரு திருத்தம் கொண்டு வந்தார். பொருட்கள் மீதான வரி தொடர்பான அறிவிக்கை மீது இந்த திருத்தத்தை கொண்டு வந்தார். அதற்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 246 வாக்குகளும் விழுந்ததால், அந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

பிஜூ ஜனதாதளம் உறுப்பினர் மஹதாப், சுற்றுச்சூழல் கூடுதல் வரி தொடர்பான திருத்தத்தை கொண்டு வந்தார். அதற்கு ஆதரவாக 41 வாக்குகளும், எதிராக 242 வாக்குகளும் விழுந்ததால், அந்த திருத்தமும் நிராகரிக்கப்பட்டது. மற்ற திருத்தங்கள், நிராகரிக்கப்பட்டன அல்லது வாபஸ் பெறப்பட்டன. அப்போது, சபையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இருந்தனர்.

மேலும் செய்திகள்