நரகுந்து அருகே அரசு பஸ்–லாரி மோதல்; 10 பேர் படுகாயம்

உப்பள்ளியில் இருந்து விஜயாப்புரா நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

Update: 2017-04-07 23:05 GMT

உப்பள்ளி,

உப்பள்ளியில் இருந்து விஜயாப்புரா நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த அரசு பஸ் கதக் மாவட்டம் நரகுந்து தாலுகா பைரகட்டி அருகே உப்பள்ளி–விஜயாப்புரா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த கானாப்பூரை சேர்ந்த வெங்கண்ணா கவுடா, விஜயாப்புராவை சேர்ந்த மகேஷ் பட்டேல், ஸ்ரீதர், உப்பள்ளி உன்கல் பகுதியை சேர்ந்த நந்தராஜூ, சிந்தகி தாலுகா கதவி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூனா, அரசு பஸ் டிரைவர் குந்துகோல் பகுதியை சேர்ந்த பாபு சாப் ஆகியோர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் நரகுந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து நரகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்