காஷ்மீரில் மத்திய போலீஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2017-04-08 23:17 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாநில முதல்–மந்திரி மெகபூபா முப்தியின் சகோதரர் முப்தி தாஸ்தக் உசேன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான சவுத்ரி ஜூலிகர் கலந்துகொள்ளும் பிரசார பொதுக்கூட்டம் அச்சபால் பகுதியில் நேற்று நடைபெற இருந்தது. இதனால் அப்பகுதியின் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்