பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சந்திப்பு

புதுடெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்து பேசினார்.

Update: 2017-04-26 09:18 GMT
புதுடெல்லி,

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று  இந்தியா வந்தார்.  இன்று காலை கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய மந்திரி நிதின் கட்கரி,வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் பிரதமர் மோடியை ரணில் விக்ரம சிங்கே சந்தித்து பேசினார். அப்போது  தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, திரிகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத்தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை  ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. நாளை வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இதனையடுத்து, அவர், வரும் சனிக்கிழமை கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் செய்திகள்