விவசாயிகளின் தற்கொலைக்கு பாஜக காரணமல்ல - நிதின் கட்கரி

முன்னாள் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விவசாயிகளின் தற்கொலைக்கு பாஜக காரணமல்ல என்று கூறினார்.

Update: 2017-04-26 20:58 GMT
புனே

தற்போது நடைபெற்று வரும் பாஜக அரசு விவசாயிகளின் தற்கொலைக்கு பொறுப்பேற்காது. மாறாக முந்தைய தேசியவாத காங்கிரஸ்- இந்திய தேசிய காங்கிரஸ் அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் ரூ. 80,000 கோடி அளவிற்கு செலவழித்து அணைகளை கட்டினர். ஆனால் அவற்றிற்கான கால்வாய்களை ஏற்படுத்தவில்லை. அவர்கள் எங்களைப் பார்த்து விவசாயிகளுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றனர். ஆனால் அவர்களைப் பார்த்து விவசாயிகள் இந்த அணைகளிலிருந்து ஏன் தண்ணீர் வரவில்லை என்று கேட்க வேண்டும் என்றார். ”முப்பதாண்டுகளாக ஆட்சி செய்த அவர்களே தலித்துகள், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைக்கு காரணம். விவசாயிகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. அதனால்தான் இன்றைய தற்கொலைகள் நிகழ்கின்றன” என்றார் கட்கரி.

”ஐம்பது சதவீத நிலங்கள் பாசன வசதி பெறும்வரை தற்கொலைகள் நிற்காது. நாங்கள் ஆட்சிக்கு வருகையில் விவசாய வளர்ச்சி என்பது பூஜ்யமாக இருந்தது. பட்னாவிஸ் அரசு வந்தப் பின் விவசாய வளர்ச்சி 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாங்கள் இதில் திருப்தியுறவில்லை. விவசாய வளர்ச்சி 20 சதவீதத்தை எட்டும்போதே விவசாயிகளின் தற்கொலை குறையும்” என்றார் கட்கரி.

மேலும் செய்திகள்