இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் தகவல்

இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2017-04-27 03:55 GMT
பரமுல்லா,

காஷ்மீரில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது

ஸ்ரீநகரில் செயல்படும் படைப்பிரிவின் கமாண்டர் ஜே.எஸ். சாந்து இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவுவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே 150 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச், ரஜவுரி பகுதிகளுக்கு அருகே அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும்கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் குறைந்துள்ளன” என்றார்.

மேலும் செய்திகள்