ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2017-04-27 06:26 GMT
புதுடெல்லி,

அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்ட லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியது.  இருப்பினும்  தற்போது வரை, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா ஆகியவற்றுக்கான குழு அமைக்கப்படவில்லை. இதனை எதிர்த்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா குழு அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்