இந்திய ராணுவம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை ஏவுகணைகளை வீசி அழித்தது

இந்திய ராணுவம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை டேங்கர்கள், ஏவுகணைகளை கொண்டு அழிக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

Update: 2017-05-08 09:06 GMT

புதுடெல்லி,

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழிக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேதியிடப்படாத இந்த வீடியோவானது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிகிறது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் இரு இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து வெறியாட்டம் ஆடியதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசிஉள்ளது, அந்த காட்சியே இப்போது வெளியாகி இருக்கும் வீடியோ என தகவல்கள் கூறிஉள்ளன. 

இந்த சம்பவம் குறிப்பாக எந்த இடத்தில் நடந்தது என்பது தெளிவாகவில்லை, இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

வீடியோவில் இந்திய டேங்கர்களில் இருந்து ஏவுகணைகள் சென்று பாகிஸ்தான் பதுங்கு குழிகளை தாக்குகிறது. ஆப்ரேஷன் தொடர்பாக ராணுவ வீரர்களின் பேச்சும் இந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

மேலும் செய்திகள்