சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு வலைதள பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Update: 2017-05-09 03:04 GMT
புதுடெல்லி,

எதிரிகளால் பதிவேற்றம் செய்யப்படும் அவதூறான கருத்துகளைப் பரப்பும் செயலில் சமூக வலைதள பயனாளர்கள்  ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் கூறியதாவது:

நீங்கள் இந்த நாட்டின் படைவீரனாக இருப்பதற்கு ராணுவச் சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை. தற்போது எல்லைப்பகுதிக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், எதிரி உங்கள் வீட்டிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதலை நடத்த முடியும்.
எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எதிரிகளால் அவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் நம் நாட்டுக்கு எதிரான அவதூறான கருத்துகளையோ, உங்களுக்குத் தெரியாத விஷயங்களையோ நீங்கள் பரப்பக் கூடாது. இத்தகைய தகவல்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நீங்கள் உண்மையான படைவீரனாக விளங்க முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்