பிரதமரின் நாற்காலி நடுங்குகிறது; தனது நண்பர்களையே தாக்க தொடங்கிவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

பிரதமர் மோடி தனது சொந்த நண்பர்களையே தாக்க தொடங்கிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-08 10:41 GMT

புதுடெல்லி,

தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அம்பானி-அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது ஏன்? இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி-அதானியை விமர்சித்து வந்தவர்கள் திடீரென விமர்சனத்தை நிறுத்தியதற்கு காரணம், அவர்களுக்கு கட்டுக்கட்டாக பணம் வந்து சேர்ந்ததால் தானா? இது குறித்து காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு விவரிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல! மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று பிரதமர் தனது சொந்த நண்பர்களையே தாக்க தொடங்கிவிட்டார். மோடியின் நாற்காலி நடுங்குவது தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்