எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பெரிய கூட்டணிக்கு வித்திடும்: ராஷ்டிரிய ஜனதாதளம் நம்பிக்கை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த மதிய உணவுக் கூட்டம் மெகா கூட்டணிக்கு வித்திடும் என லாலுவின் ரா.ஜ.த நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Update: 2017-05-27 22:24 GMT
பட்னா

அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் மனோஜ் சின்ஹா கூறும்போது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை அரசு உணர்ந்து கொண்டு ஒருமனதாக ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய முன் வராவிட்டால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பு 2019 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் தொடரும் சூழ்நிலை ஏற்படலாம் என்றார்.

“லாலுவும், நிதிஷூம் 2015 ஆம் ஆண்டில் இணைந்து பிகாரில் வென்றது போன்ற மெகா கூட்டணி நிகழலாம்” என்றார் மனோஜ் சின்ஹா.  இக்கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் கலந்து கொள்ளாததை ஊடகங்களே பெரிதுபடுத்துகின்றன. இப்படி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பாஜகவைவிட ஊடகங்களே அதிகம் பாதிக்கப்படிருப்பது போல தெரிகிறது” என்றார் அவர். நிதிஷ் குமாருக்கு பதிலாக கட்சியின் மூத்தத் தலைவர் ஷரத் யாதவ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த பின்னணியில் நிதின் கட்கரியின் மணிவிழாவில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், “ மற்ற ஆர் எஸ் எஸ் - பாஜக தலைவர்கள் போல் இல்லாமல் எதிர்க்கட்சியினருடன் சுமூகமான உறவைப் பேணுபவர் கட்கரி” என்று புகழ்ந்து பேசியுள்ளார். மராட்டிய, இந்திய மக்களின் நலனைப் பொறுத்தவரையில் அவர் தத்துவார்த்த கட்டுப்பாடுகளிலிருந்து விலகி பிறக்கட்சித் தலைவர்களுடன் நல்ல உறவை பேணி வருகிறார்” என்றார் பவார்.

மேலும் செய்திகள்