இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் நியமனம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2017-06-22 02:47 GMT
வாஷிங்டன், 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த ரிச்சர்ட் வர்மா, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தோற்றவுடன், தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தூதர் நியமிக்கப்படும் வரை, அவர் தூதர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தூதராக கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை வெள்ளை மாளிகை துணை செய்தித்தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் உறுதிப்படுத்தினார். அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்த பிறகு, இந்த நியமனம் அமலுக்கு வரும்.

கென்னத் ஜஸ்டர், அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், இந்தியா சார்ந்த விவகாரங்களில் அனுபவம் பெற்றவர்.பிரதமர் நரேந்திர மோடி, 26–ந் தேதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்கும் நிலையில், இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்