மராட்டியத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

மராட்டியத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Update: 2017-06-24 12:07 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இந்தாண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர். சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் செய்தியார்களிடம் கூறியதாவது:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ.34,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.  ரூ.1.5 லட்சம் வரை விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடிக்காக எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்