சர்ஜிகல் தாக்குதல் இந்தியா தன்னை பாதுகாத்துக்கொள்ளும் என்பதைக் காட்டியது: மோடி

சர்ஜிகல் தாக்குதல் மூலம் இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது என்பதை நிரூபித்தது என்றார் பிரதமர் மோடி.

Update: 2017-06-25 22:03 GMT
வாஷிங்டன்

இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு ஒன்றின் போது பேசிய பிரதமர், “ இந்தியா 20 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதம் பற்றி பேசியபோது அதை சட்டம், ஒழுங்கு பிரச்சினை என்று பேசியவர்கள், புரிந்து கொள்ளாமல் பேசினார்கள். இப்போது தீவிரவாதிகள் அவர்களுக்கு தீவிரவாதத்தை விவரித்துள்ளதால் நாம் அதைச் செய்ய வேண்டாம்” என்றார்.

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கூறுவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ”இந்தியா சர்ஜிகல் தாக்குதல் நடத்திய போது உலகம் நமது ஆற்றலை அறிந்து கொண்டனர்; இந்தியா பொறுமையும் காக்கும், தேவையென்றால் சக்தியையும் காட்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்” என்றார் மோடி.

உலக ஒழுங்கையும், விதிகளையும் பின்பற்றியே இந்தியா தனது வளர்ச்சிப்பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்ற மோடி அதுதான் இந்தியாவின் மரபு, கலாச்சாரம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய சமூகத்தின் கனவான இந்திய வளர்ச்சியை நான் நிறைவேற்றுவேன் என்றும் மோடி உறுதியளித்தார். இந்தியாவின் முன்னேற்றத்தை வேகமான தடத்தில் கொண்டு செல்லும் போது அதில ஊழலுக்கும், நேர்மையற்ற தன்மைக்கும் இடமில்லை என்றார். 

இந்தியர்கள் ஊழலை வெறுக்கிறார்கள் என்றும் தனது அரசு ஊழலின் சவாலை சந்திக்க உறுதி பூண்டுள்ளது என்றார். தொழில்நுட்பம் மூலம் ஊழலை ஒழித்து அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர தொழில்நுட்பம் உதவுகிறது என்று விளக்கினார் மோடி.

நீடித்த வளர்ச்சிக்கு உள்கட்டுமானம் அவசியம் என்று கூறிய மோடி தனது அரசு உயர்தர வளர்ச்சிக்கு உலகத்தரமான அளவீடுகளை பின்பற்றுகிறது என்றார்.

மேலும் செய்திகள்