கடல் ரோந்து பணிக்கு இரு கப்பல்களை கட்டி வழங்கியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம் மூலம் இரண்டு ரோந்து கப்பல்களை கட்டி கடற்படையிடம் வழங்கியுள்ளது பிரபல தனியார் நிறுவனமான ரிலையன்ஸ்.

Update: 2017-07-25 12:08 GMT
புதுடெல்லி

இவற்றை குஜராத்திலுள்ள தங்களுடைய பிபவாவ் துறைமுகத்தில் கட்டுவித்திருக்கிறது ரிலையன்ஸ். இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்காக கட்டப்படவுள்ள ஐந்து கப்பல்களில் ஒரு பகுதியே. இவற்றிற்கு ஷாசி, ஸ்ருதி என பெயர்கள் இடப்பட்டுள்ளன. 

இக்கப்பல்களின் முக்கியப்பணி பரந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எஓந்து பணியினை மேற்கொள்வது, கடத்தல் மற்றும் கொள்ளைத் தடுப்பு, கடல் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் இதரப் பணிகளை மேற்கொள்ளும். 

இக்கப்பல்களில் 76 மிமி அளவுள்ள சூப்பர் ரேபிட் கன் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் 30 மிமி ஏகே-630 எம் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டிருக்கும். இவை நடுத்தர, குறுகிய தூர பாதுகாப்பிற்கு ஏற்றவையாகும்.

டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கப்பல்களில் 25 நாட்டுக்கள் வேகத்தில் செல்லும். இதன் துவக்க விழாவில் பேசிய துணை கப்பற்படைத் தலைவர் கிரிஷ் லுத்தரா கடற்படை வழங்கும் வாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல திட்டங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கட்டப்பட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்