பணமதிப்பு நீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான பாதிப்பை கொடுத்துள்ளது - மத்திய அரசு

பணமதிப்புநீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2017-07-25 13:59 GMT
புதுடெல்லி


குறிப்பாக தீவிரவாத செயல்பாடுகளில் அதன் தாக்கம் சாதகமாக இருக்கிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மக்களவையில் கொடுத்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்தார். 

“மத்திய புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளபடி ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகியவற்றின் பண மதிப்பு நீக்கம் தீவிரவாத செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார் அமைச்சர்.

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பணம் பயனற்று போய்விட்டது என்று கூறினார் அமைச்சர்.  மேலும் பாகிஸ்தான் அச்சடித்து புழக்கத்தில் விட்ட உயர்தர போலி ரூபாய் நோட்டுகளையும் பணமதிப்புநீக்கம் குலைத்து விட்டது. அத்துடன் ஹவாலா செயல்பாடுகளையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அஹிர்.

மேலும் செய்திகள்