உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் அதிரடி இடைநீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பூரி-ஹரித்துவார் உத்கால் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தடம்புரண்டது.

Update: 2017-08-20 22:29 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பூரி-ஹரித்துவார் உத்கால் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தடம்புரண்டது. இந்த விபத்துக்கு ரெயில் அதிகாரிகளின் கவனக்குறைவே என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் விபத்து நடந்த வடக்கு ரெயில்வே இலாகாவின் உயர் அதிகாரிகள் பலர் நேற்று அதிரடியாக இடை நீக்கமும், பணியிட மாறுதலும் செய்யப்பட்டனர். சிலர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

வடக்கு ரெயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.என்.குல்ஸ்ரீரேஸ்தா, ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர் மற்றும் டிவிஷனல் ரெயில்வே மேலாளர்(டெல்லி) ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு ரெயில்வேயின் தலைமை கண்காணிப்பு என்ஜினீயர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். வடக்கு ரெயில்வேயில் தண்டவாள பராமரிப்பை கவனித்து வந்த ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் டிவிஷனல் என்ஜினீயர் உள்பட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்