பாலியல் பலாத்கார வழக்கில் பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை கேரள கோர்ட்டு தீர்ப்பு

2011–ம் ஆண்டு கேரளாவில் தனது பெற்றோரால் சிறுமி ஒருத்தி ஷோபா ஜான் என்ற பெண்ணிடம் விலைக்கு விற்கப்பட்டாள்.

Update: 2017-08-22 22:45 GMT

கொச்சி,

தனது பாதுகாப்பில் இருந்த அந்த சிறுமியை ஷோபா ஜான் பல முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கினாள். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பின்னர் போலீசாரால் மீட்கப்பட்டாள். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் குற்றம் தொடர்பாக வரப்புழா போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயசந்திரன், ஷோபா ஜான் உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை கொச்சியில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்த 43 வயது ஷோபா ஜானுக்கு கோர்ட்டு 18 ஆண்டு தண்டனையும் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. ஜெயசந்திரனுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் இருந்து மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்