முத்தலாக் அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பேட்டியெடுக்க ஆண்கள் எதிர்ப்பு

முத்தலாக் தீர்ப்பு தொடர்பாக அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பேட்டியெடுத்த செய்தியாளரிடம் ஆண்கள் தகாத முறையில் நடந்து உள்ளனர்.

Update: 2017-08-23 10:39 GMT

 
லக்னோ,

முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை அடுத்து அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் இந்தியா டுடே செய்தியாளர் மற்றும் கேமரா மேன் பேட்டி கண்டனர். அப்போது ஒரு கும்பலாக ஆண்கள் வந்து செய்தியாளர் மற்றும் கேமரா மேனை தடுத்து உள்ளனர். அவதுறாக பேசிஉள்ளனர். ஆண்கள் கும்பலாக கேமரா மேனின் கேமராவை தள்ளிவிட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களிடம் பேட்டிக் காண்பதை நிறுத்த வேண்டும் என மிரட்டிஉள்ளனர். செய்தியாளர் இல்மா ஹாசன் அவர்களை சமாதானம் செய்ய முயற்சிசெய்து உள்ளார், பேட்டி எடுக்க பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். ஆனால் அவருடைய கூற்றில் சமாதானம் அடையதவர்கள், கும்பலாக சுற்றிஉள்ளனர். 

இதனையடுத்து செய்தியாளரை போலீசுக்கு அழைப்பு விடுங்கள், அழைப்பு விடுங்கள் என கோரிஉள்ளனர். இடையூறு ஏற்படுத்தி சுற்றி வளைத்த ஆண்களிடம் இறுதியாக இல்மா ஹாசன், ஆண்கள் பயப்படவேண்டாம், உங்களுடைய முகத்தை காட்டுங்கள், ஏற்கனவே கேமராவில் பதிவாகிவிட்டது என கூறுகிறார். பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர் ரானா சாப்வி மாணவர்களின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார், மாணவர்கள் சார்பாக இம்லா ஹாசனிடம் மன்னிப்பு கோரினார். இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக இம்லா ஹாசன் போலீசில் புகார் கொடுத்து உள்ளார் எனவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்