ரெயில்வே வாரியத்தின் தலைவராக ஏர்இந்தியாவின் அஸ்வினி லோகானி நியமனம்

ரெயில்வே வாரியத்தின் தலைவராக ஏர்இந்தியாவின் அஸ்வினி லோகானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2017-08-23 11:58 GMT


புதுடெல்லி,


ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் 19-ம் தேதி முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. விபத்தில் இறந்தவர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்தனர். 
இன்றும் டெல்லியை நோக்கி சென்ற கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசத்தில் தடம் புரண்டது. 5 நாட்களில் நடைபெறும் இரண்டாவது ரெயில் விபத்து இதுவாகும். இதனைத் தொடர்ந்து விபத்து சம்பவங்களுக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார் என அறிவித்து உள்ளார். பிரதமர் மோடி காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார் எனவும் சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார். 

இதற்கிடையே ரெயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏகே மிட்டல் ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து ரெயில்வே வாரியத்தின் தலைவராக ஏர்இந்தியாவின் அஸ்வினி லோகானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

ஏர்இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் அஸ்வினி லோகானி புதிய ரெயில்வே வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கிடையே அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் சுரேஷ் பிரபுவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்