கேரளாவில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது உம்மன்சாண்டி குற்றச்சாட்டு

கேரளத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது என முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2017-08-23 17:05 GMT
செருதோணி,

இடுக்கி மாவட்டம் செருதோணி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:–

கேரளத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. இதன்காரணமாக 500–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சம் ரே‌ஷன்கார்டுகள் முடங்கி கிடக்கின்றன. கேரளத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்து வருகிறது. இதை தடுக்காமல் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 43 ஆயிரம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது. இடதுசாரி ஆட்சி ஏற்றபின்பு நிலப்பட்டா வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் நிலப்பட்டா வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்