யார் இந்த குர்மீத்?

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குர்மீத் யார் என்பது குறித்த ஒரு தகவல் தொகுப்பு வருமாறு:– குர்மீத், அரியானாவில் உள்ள சிர்சாவில் வசித்து வந்தாலும், இவர் ராஜஸ்தான் மாநிலம், சிறி குருசார் மோதியா என்ற கிராமத்தில் 1967–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி பிறந்தவர்.

Update: 2017-08-25 23:45 GMT

சண்டிகார்,

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். தங்கள் மத நம்பிக்கையை இவர் அவமதித்ததாக சீக்கிய மதத் தலைவர்கள் குற்றம் சாட்டியது உண்டு.

இவருக்கு உலகமெங்கும் 5 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.

சிர்சாவில் உள்ள இவரது ஆசிரம வளாகம், 800 ஏக்கர் பரப்பளவிலானது.

2003–ம் ஆண்டு இவர் நடத்திய ரத்த தான முகாம், உலகிலேயே மிகப்பெரியது என்ற வகையில் கின்னஸ் சாதனை ஏட்டில் இடம் பிடித்தது.

ஆன்மிகவாதியாக வலம் வந்தாலும், சினிமா, இசை என பல்துறை ஆர்வலர்.

இசை வீடியோக்களில் தோன்றியுள்ளார். இவரது ‘லவ் சார்ஜர்’ என்ற வீடியோ, சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ‘மெசஞ்சர் ஆப் காட்’, ‘மெசஞ்சர் ஆப் காட் 2’ ஆகிய 2 சினிமா படங்களில் தோன்றி நடித்துள்ளார்.

முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்து வந்த இவர், பின்னர் பா.ஜனதா பக்கம் தாவினார்.

இவர் ஹர்ஜித் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஹனிபிரீத், சரண் பிரீத், அமர் பிரீத், ஜஸ்மீத் பிரீத் என 4 குழந்தைகள்.

தற்போது கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள இவர், கொலை வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்