தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

Update: 2017-09-21 10:19 GMT
புதுடெல்லி,

உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக தேர்வானதையடுத்து, தனது எம்.பி பதவியை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்தார். இதேபோல், துணை முதல் மந்திரி கேசவ பிரசாத் மயூராவும் தனது எம்.பி பொறுப்பை ராஜினாமா செய்தார்.

மக்களவை செயலகத்தில் இரு பாஜக எம்.பிக்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக லோக்சபா செயல மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் இருந்தும் மயூரா புல்பூர்(அலகாபாத்) தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். 

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்ததையடுத்து, முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் மாதம் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கடந்த வாரம், உத்தர பிரதேச சட்ட மேலவையில் போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். எம்.பி பதவி ராஜினாமா செய்ததை அறிவிக்கையாக வெளியிட்டதும் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும். 

மேலும் செய்திகள்