உத்தரபிரதேசத்தில் போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரை இறங்க ஏற்பாடு

அவசர காலங்களில் போர் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரை இறக்கவும், அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

Update: 2017-10-19 22:00 GMT

லக்னோ,

அதன்படி, வருகிற 24–ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கார்மாவ் என்ற இடத்தில் லக்னோ–ஆக்ரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ்–2000, ஜாக்குவார், சுகோய்–30 எம்.கே.ஐ., ஜாக்குவார் மற்றும் ஏ.என்.–32 சரக்கு விமானம் உள்ளிட்ட 20 போர் விமானங்கள் தரை இறக்கப்படுகின்றன. பின்னர் சிறிது நேரத்தில் அந்த விமானங்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லும். ஏ.என்.–32 சரக்கு விமானம் சாலையில் தரை இறங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக அந்த சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குறிப்பிட்ட தூரம் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவலை ராணுவ மத்திய படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கார்கி மாலிக் சின்கா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்