எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெங்கையா நாயுடு வீடு திரும்பினார்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் முழு உடல் பரிசோதனைக்காக சென்றார்.

Update: 2017-10-21 22:30 GMT

புதுடெல்லி,

அப்போது எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராபி பரிசோதனையில் அவரது இதய குழாய் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது ரத்தக்குழாய் அடைப்பை சீராக்குவதற்கான ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. டாக்டர் பல்ராம் பார்கவா தலைமையிலான மருத்துவக்குழுவினர் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த சிகிச்சையை முடித்துக்கொண்டு வெங்கையா நாயுடு நேற்று வீடு திரும்பினார். அவரை 3 நாட்கள் முழு ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நாட்களில் பார்வையாளர்களை சந்திக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்