புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்: எதிர்கட்சிகள் வெளிநடப்பு; ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு தாக்கல்

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டமன்ற கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2017-11-23 06:45 GMT
சென்னை

புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி சட்டசபைக்குள் அதிமுக எம்எல்ஏ-க்கள் முட்டை, சர்க்கரை, சேலையுடன்  வந்தனர். இலவச வேட்டி-சேலை, 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படாததை கண்டித்து   அவர்கள் அவ்வாறு வாந்ததாக கூறினர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  அரசு அறிவித்த பல திட்டங்களை செயல்படுத்தாததால் வெளிநடப்பு செய்ததாக புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் கூறினார். மேலும் அவர் கூறும் போது  வீட்டு வரி, மின்சார வரிகள் பல மடங்கு அரசு உயர்த்தி உள்ளது என கூறினார்.

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் வெளிநடப்பு செய்தார்.  புதுச்சேரி அரசு, மக்கள் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது . 2 ஆண்டு கால ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, எனவே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்   என ரங்கசாமி கூறினார்.

 ஜல்லிக்கட்டு நடத்த புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மணி நேரமே நடைபெற்ற சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்