'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது

'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-28 03:21 GMT

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, கேரளாவில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 26ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 71.16 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (வயது 51) 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜி நேற்றே ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்