முந்தைய அரசைபோன்று இல்லாமல் இப்போதைய அரசு இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை கொள்கிறது

முந்தைய அரசைபோன்று இல்லாமல் இப்போதைய அரசு இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை காட்டுகிறது என சாய்ஸ்தா அம்பர் கூறிஉள்ளார்.

Update: 2017-12-15 12:04 GMT

புதுடெல்லி,


முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அகில இந்திய முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியத்தின் தலைவர் சாய்ஸ்தா அம்பர், நாங்கள் இதனை வரவேற்கிறோம், இது மிகவும் அவசியமானது.  முந்தைய அரசை போன்று இல்லாமல் இப்போதைய அரசு இஸ்லாமிய பெண்களின் நலன் குறித்து அக்கறை காட்டுகிறது. பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறுவதை அனைத்து கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என கூறிஉள்ளார். 

இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்