மத்திய அரசுக்கு உங்கள் குறைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை மிசோரமில் பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசுக்கு உங்கள் குறைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என மிசோரமில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2017-12-16 05:54 GMT
மிசோரம்,

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மிசோரம் வந்தார். மிசோரமை தொடர்ந்து மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.

மிசோரமில்  அஸிவால் நகரில் 60 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் அசாம் ரைபிஸ் படை மைதானத்தில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:

அழகான மாநிலத்திற்கு நான் வருகை புரிந்த நாள் இன்று.  மிசோரமின் மக்களுடன் நேரத்தை செலவழித்த நேரம் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு உங்கள் குறைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. டெல்லி அதிகாரிகளே உங்களிடம் வருவார்கள். 

வடகிழக்கு மாநில வளர்ச்சிக்காக ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயியின் கணிசமான வேலை முடிக்கப்பட்டது.  என் மந்திரிகள் அடிக்கடி வடகிழக்கு மாநில வளர்ச்சிக்காக சென்று வருகிறார்கள்.  மிசோராமில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் முதல் பிரதான மத்திய அரசு திட்டம் துய்யல் ஹைட்ரோபவர் திட்டம் ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்