கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு இனி கூடுதல் கட்டணம்? ரெயில்வே துறை மறுப்பு

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு ரெயில்வே துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2017-12-27 08:41 GMT
புதுடெல்லி

ரெயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்காக மத்திய ரெயில்வே இலாகா பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பயணிகளின் நெரிசலை சமாளிப்பதற்காக சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களை அறிமுகம் செய்தனர்.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்கும் முறையை அப்போது கொண்டு வந்தனர். விடுமுறை காலங்களில் அதிகளவு மக்கள் வெளியூர்களுக்கு செல்வார்கள் என்பதால் கட்டணத்தை அதற்கேற்ப உயர்த்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

அதன்படி முதல் 30 சதவீத டிக்கெட்டுகள் வழக்கமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பயணி களின் வருகைக்கேற்ப ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டும், அடுத்தடுத்த 10 சதவீத கட்டண உயர்வுடன் 
வசூலிக்கப்படுகிறது.

சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் சில சமயம் விமான கட்டணத்தையும் மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். என்றாலும் மத்திய அரசு சுவிதா ரெயில்களின் கட்டண உயர்வை இன்னமும் ஒழுங்குப்படுத்த வில்லை.

இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே இலாகா ஆலோசித்து வருகிறது. ரெயில்களில் ஜன்னலோர இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் அதிகப் போட்டி காணப்படும்.

இந்த போட்டியை கருத்தில் கொண்டு ஜன்னலோர இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் கூடுதல் கட் டணம் வசூலிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி ஜன்னலோர இருக்கைகளுக்கு பயணிகள் கூடுதலாக ரூ.50 வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக் கும் என்று தெரிகிறது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

ஆனால் இதற்கு ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்ஸேனா.  ஜன்னலோர இருக்கை மற்றும் கீழ் படுக்கைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50 க்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி  தவறானது. அது வதந்தி என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்