மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள்! இருவர் கைது

மேற்கு வங்காளத்தில் மீண்டும் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. #Malda #BSF

Update: 2017-12-31 12:42 GMT

கொல்கத்தா,



மேற்கு வங்காள மாநிலம் மால்டாவின் குலாப்காஞ்ச் பகுதியில் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் இருவரை எல்லைப் பாதுகாப்பு படை விசாரணை செய்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை ரூ. 6,50,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து உள்ளது. கடந்த 26-ம் தேதியும் எல்லைப் பாதுகாப்பு படை மால்டாவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் ஒருவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது. 

பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் செய்திகள்